Tuesday, June 19, 2018

தனியார் ஆஸ்பத்திரிகளில் சேவைகளுக்கான 'வற்' வரி நீக்கம்

June 20, 2018

தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளர்கள் அனுமதிப்புக்குரிய அறைக்கான கட்டணம் தவிர்ந்த ஏனைய சேவைகளுக்கான "வற்" வரி எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் நீக்கப்படுமென நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்றுத் (19) தெரிவித்தார். நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரத மர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் (19) அமைச்சரவை கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட 15 வீத வற் வரியை சுகாதார சேவைகளிலிருந்தும் அறவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது என்பதை அமைச்சர் மங்கள சமரவீர நினைவுகூர்ந்ததுடன் முதலாவதாக வெளி நோயாளர் சேவையில் அறவிடப்பட்டுவந்த வற் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கு பொறுப்புடன் மற்றும் மனிதாபிமானத்துடன் நடவடிக்கை எடுக்கும் அரசு எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் வைத்திய ஆலோசனை சேவை கட்டணம், சனலின் கட்டணம் உட்பட வைத்தியத்துறை சார்ந்த சேவைகளில் அறவிடப்படும் 15 வீத வற் வரி நீக்கப்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்தார். நிதி அமைச்சில் நேற்று(19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment