19.06.2018
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இந்த மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட வேளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் சமூகமளிக்காமை காரணமாக இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு இன்றைய தினம் தாம் ஜனாதிபதியை சந்திக்க எதிர்பார்ப்பதாக பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அறிவித்துள்ளார்






0 comments:
Post a Comment