Tuesday, June 19, 2018

"வினைத்திறனான பிறைக்குழுவை, அமைப்பதற்கான சில ஆலோசனைகள்"


, June 19, 2018 

இன்­றி­ருக்கும் பிறைக்­கு­ழுவின் மீது மக்கள் நம்­பிக்­கை­யி­ழந்து வரும் நிலையில் தீர்­வாக பிறைக்­கு­ழுவில் மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என பர­வ­லாகப் பேசப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லையில் அக்­குழு எவ்­வாறு அமைய வேண்டும் என்­ப­தற்­கான ஓர் ஆலோ­ச­னையை இங்கு முன்­வைக்க விரும்­பு­கிறேன்.

முதலில் பிறை பற்­றிய தீர்­மா­னத்தை மேற்­கொள்ள வேண்­டி­ய­வர்கள் யார் என்ற கேள்­விக்கு விடை காண­வேண்டும்.

இந்தக் கேள்­விக்கு பதில் தேட­வேண்­டு­மானால் நாம் பிறை பற்­றிய சில அடிப்­ப­டை­களைப் புரிந்­து­கொள்ள வேண்டும். பிறை சம்­பந்­த­மான முடிவு எடுப்­ப­தற்கு இரண்டு வித­மான நிப­ணர்கள் தேவைப்­ப­டு­கி­றார்கள். முத­லா­வது, நாம் பின்­பற்­று­வது தேசியப் பிறையா, பிராந்­தியப் பிறையா, சர்­வ­தேசப் பிறையா அல்­லது பிறையைக் கணிப்­பதா என்ற கேள்­விக்கு விடை தர­வேண்­டிய மார்க்க அறி­ஞர்கள், இக்­கேள்­விக்கு விடை கண்டு விட்டால் அடுத்த கேள்வி ஒவ்­வொரு மாதமும் பிறை பற்­றிய முடிவை எடுக்க வேண்­டி­ய­வர்கள் யார்? என்­பது.

அப்­ப­ணியைத் தற்­பொ­ழுது பிறைக்­குழு செய்து வரு­கி­றது. தற்­பொ­ழுது உள்ள பிறைக்­குழு பொருத்­த­மா­னது தானா அல்­லது அதில் மாற்றம் நிகழ வேண்­டுமா என்­பது பற்­றியே சில கருத்­துக்­களை முன்­வைக்க விரும்­பு­கிறேன்.

இங்கு நான் தற்­போது இருப்­ப­வர்­களின் மீதுள்ள நம்­ப­கத்­தன்மை பற்றி பேச முனை­ய­வில்லை. மாறாக அவர்­களின் தகைமை பற்­றியே பேச விழை­கிறேன்.

பிறை என்­பது வானியல் என்ற இயற்கை விஞ்­ஞானப் பிரிவைச் சார்ந்த ஒரு விடயம். பிறைக்­கு­ழுவின் பொறுப்பு குறித்த தினத்தில் பிறை தென்­ப­டு­வ­தற்கு சாத்­தி­யங்கள் உள்­ள­னவா, பிறை தென்­பட்­டதை உறு­திப்­ப­டுத்தல் போன்­ற­னவே. பிறை தென்­பட்­டதா இல்­லையா என்ற கேள்­விக்கு விடை கிடைத்து விட்டால் மாதத்தின் ஆரம்­பத்தைத் தீர்­மா­னிப்­பது எப்­படி என்­பது அனைத்து முஸ்­லிம்­க­ளுக்கும் தெரிந்த விடயம். பிறை குறித்த தினத்தில் தெரி­யுமா இல்­லையா? தென்­பட்­ட­தாகச் சொல்­லப்­ப­டு­வது நம்­ப­க­மா­னதா இல்­லையா? என்ற தீர்­மானம் எடுப்­ப­தற்குத் தேவை­யான அறிவு வானியல் பற்­றிய அறிவே.

வானியல் சம்­பந்­த­மாக ஆழ்ந்த அறி­வில்­லா­த­வர்­க­ளிடம் பிறை பற்­றிய தீர்­மா­னத்தை எடுக்கும் பொறுப்பைக் கொடுப்­பதோ அல்­லது அவர்­களை இக்­கு­ழுவில் உள்­ள­டக்­கு­வ­திலோ எந்த அர்த்­தமும் இல்லை.

உண்­மையில் வானி­யலை முறை­யாகக் கற்­காத இஸ்­லா­மிய அறி­ஞர்­களும் இக்­கு­ழு­வுக்குப் பொருத்­த­மற்­ற­வர்கள் தான். காரணம், நான் ஏற்­க­னவே குறிப்­பிட்­டது போல் இது விஞ்­ஞா­னத்தின் அடிப்­ப­டையில் முடிவு எடுக்கப் பட­வேண்­டிய விடயம்.

இலங்கை ஒரு இஸ்­லா­மிய நாடாக இருந்­தி­ருந்தால் பிறை பற்­றிய முடிவை அறி­விக்கும் பொறுப்பு இலங்கை வானிலை ஆய்வு மையத்­திற்கே வழங்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும். அல்­லது ஐக்­கிய அமெ­ரிக்கா இஸ்­லா­மிய நாடாக இருந்தால் இப்­பொ­றுப்பு NASA வுக்கு வழங்கப் பட்­டி­ருக்­க­வேண்டும்.

இலங்­கையில் பிறைக்­குழு எவ்­வாறு அமைய வேண்டும்? சட்ட ஆலோ­ச­னை­க­ளுக்கு சட்­டத்­த­ர­ணி­களை நாடு­கிறோம், சுகா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்கு வைத்­தி­யர்­க­ளிடம் தீர்வு கேட்­கிறோம், தொழி­நுட்ப ஆலோ­ச­னை­க­ளுக்கு பொறி­யி­ய­லா­ளர்­களை நாடு­கிறோம். அதே போல் வான­வியல் சார்ந்த பிரச்­சி­னைக்கு தீர்வை வான­வியல் நிபு­ணர்­க­ளி­டமே பெற­வேண்டும்.

எமக்கு இலங்கை வானிலை அவ­தான நிலை­யத்தில் முழு­மை­யாகத் தங்­கி­யி­ருக்க முடி­யாத நிலையில் நாம் எமது சமூ­கத்­தி­லுள்ள வானி­யலை முறைப்­படி கற்ற துறைசார் நிபு­ணர்­களைக் கொண்ட ஒரு குழு அமைக்­கப்­பட வேண்டும், அக்­கு­ழுவில் வானி­யலைப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் கற்­பிக்கும் விரி­வு­ரை­யா­ளர்கள், வானியல் சார்ந்த ஆய்­வு­களில் ஈடு­பட்­டி­ருக்கும் விஞ்­ஞா­னிகள், வானி­ய­லுடன் சம்­பந்­த­மான உதா­ர­ண­மாக, வானிலை ஆய்வு மையம் போன்ற நிறு­வ­னங்­களில் வேலை செய்யும் நிபு­ணர்கள் போன்­ற­வர்­களை உள்­ள­டக்­கி­ய­தாக இருக்­க­வேண்டும். இவர்­களின் பொறுப்பு பிறை தென்­பட வாய்ப்­புகள் உள்­ளதா இல்­லையா தென்­பட்­ட­தாகச் சொல்லப் படும் தகவல் நம்­ப­க­மா­னதா இல்­லையா போன்ற தீர்­மா­னங்­களை எடுப்­பதும் எத்­தி­னத்தில் குறிந்த மாதம் ஆரம்­ப­மாகும் என்ற முடிவை அறி­வித்­த­லுமே.

இம்­மு­டிவை அறி­விப்­ப­தற்கு மார்க்க அறி­ஞர்கள் போன்ற வேறு துறை சார்ந்­த­வர்கள் அவ­சி­ய­மில்லை. பிக்ஹு சார்ந்த பிரச்­சி­னைகள் வரும்­போது உதா­ர­ண­மாக, இரு­பத்து எட்டு நாட்­களில் அடுத்த மாதத்­திற்­கான தலைப்­பிறை தென்­பட்டால் என்ன செய்­வது போன்ற பிரச்­சி­னை­க­ளுக்கு மார்க்கத் தீர்ப்பை வழங்கும் பொறுப்பு ஜம்­இய்­யத்துல் உல­மா­வுக்கு வழங்­கலாம். ஆனால் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் அடிக்­கடி ஏற்­ப­டு­வ­தில்லை என்ற வகையில் அவர்கள் பிறைக்­கு­ழுவில் உள்­ள­டக்­கப்­பட வேண்­டி­ய­தில்லை.

பிறைக்­கு­ழு­வுக்கு உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்தல் மற்றும் பிறைக்­கு­ழுவின் முடி­வு­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்தல் போன்றவற்றை முஸ்லிம் கலாசாரத் திணைக்களம் பொறுப்பேற்பது பொருத்தமாக அமையும். எதிர்வரும் காலங்களில் பிறையைத் தீர்மானிக்கும் அதிகாரம் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழேயே கொண்டுவரப்படும் என அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டுள்ளமையும் வரவேற்கத்தக்கது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலும் ஜம்மியத்துல் உலமாவும் இல்லாத பிறைக்குழு என்பதை ஜீரணிப்பது பலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் நிதானமாகவும் ஆழமாகவும் சிந்தித்துப் பார்த்தால் இக்கருத்தின் நியாயம் புரியும்.

-சப்ராஸ் புஹாரி-

0 comments:

Post a Comment