இந்த ஆண்டின் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 33 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், 24 கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதுடன், மீதமுள்ள வழக்குகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பில் 17 பேரை கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள், பாதாள உலக குழு தலைவர்களான, மாகந்துர மதுஸ், அங்கொட லொக்கா, கெசல்வத்த தினுக, துனகஹ சஞ்சீவ மற்றும் சமயங் ஆகியோருக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பில் விசேட பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tamilwin






0 comments:
Post a Comment