Tuesday, June 19, 2018

அதி வேகமாக பயணித்த கார் பொலிசார் மீதி மோதியதில் ஒருவர் பலி ! 5 பேர் படுகாயம் !

June 19, 2018
 

கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நில்திய உயன பிரதேசத்தில் அதிக வேகமாக பயணித்த சிற்றூர்தியொன்று வீதியை விட்டு விலகி இடம்பெற்ற விபத்தில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு காவல்துறை அதிகாரியும், சிற்றூர்தியில் பயணித்த நான்கு பேரும் மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டுள்ளதால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் மாத்தளை – கித்தலவெல்லகொட பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான காவல்துறை உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் சிற்றூர்தியின் சாரதி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் குறித்த பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

0 comments:

Post a Comment