Saturday, January 12, 2019

இறக்காமம் பிரதேச செயலகத்தில் வருட இறுதி ஒன்றுகூடல் 2019

13.01.2019 ( படங்கள்)

இறக்காமம் பிரதேச செயலகத்தில் சேவையாற்றி பல்வேறு இடங்களுக்கு வருட இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும் புதுவருட  தினத்தை வரவேற்கும் நோக்கிலேயே ஏற்பாடு செய்யப்பட்ட வருட இறுதி ஒன்று கூடல் நிகழ்வு நேற்று 12 இலுக்குச் சேனை GMMS பாடசாலையில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களின் சேவையை பாராட்டி பாராட்டும் பரிசில்களும் ஞாபகச்சின்னங்களும் சிறப்பு அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வை சிறப்பிக்க  இறக்காமம் சன் றைஸ் இசைக்குழுவினரின் இசை நிகழ்வு இடம்பெற்றதுடன் இதில் பல உத்தியோகத்தர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி பாடல், கவிதை, நாடகங்களையும் நடித்து பல பரிசுகளை பெற்றனர்.

அத்தோடு இந்நிகழ்வுக்கு தலைமையாக எம்.எம். நசீர் பிரதேச செயலாளர் எப்f. நயிஜா உதவி பிரதேச செயலாளர்
கே. எல்.எம்.ஹமீட் உதவி திட்டப் பணிப்பாளர் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டனர்.

0 comments:

Post a Comment