Friday, January 11, 2019

கிழக்கு ஆளுநர் நியமனத்திற்கு எதிராக ஹர்த்தால்


January 11, 2019

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (11) காலை முதல் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு மக்கள் ஒன்றியம் என்னும் தலைப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான சுவரொட்டிகளும் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நகரில் உள்ள தமிழர்களின் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதுடன் வங்கிகள் மற்றும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பாடசாலைகளும் மாணவர்கள் வரவுகள் இன்மையினால் கல்வி நடவடிக்கைகள் முற்றாகச் செயலிழந்துள்ளதுடன் அரச நிறுவனங்கள் மக்கள் வரவின்மையினால் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டிருந்த நிலையில் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்து. பின்னர் பொலிஸாரின் தலையீட்டால் டயர்கள் அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் வாழைச்சேனை கிண்ணையடி சந்திவெளி முறக்கெட்டாஞ்சேனை வந்தாறுமூலை உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக முடங்கியுள்ளதுடன், ஆரையம்பதி களுவாஞ்சிகுடி பட்டிருப்பு உள்ளட்ட பகுதிகளும் முழுமையாக முடங்கியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

எனினும் முஸ்லிம் பிரதேசங்களில் அனைத்து நடவடிக்கைகளும் வழமைபோன்று நடைபெற்றன.
இதேநேரம் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருமலை ஆகிய மாவட்டங்களில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் இன்று காலை மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் டயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது பின்னர் பொலீஸாரின் தலையீட்டால் மீண்டும் போக்குவரத்து வழமை நிலைக்கு நிரும்பியுள்ளதுடன் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment