Saturday, January 12, 2019

கஞ்சாவை மூலப் பொருளாக கொண்டு மருந்து தயாரிக்கும் நிறுவனம் இலங்கையிலும் காலடி வைக்கிறது.

January 12, 2019

கஞ்சாவை மூலப் பொருளாக கொண்டு மருந்து தயாரிக்கும் நிறுவனமான அவுஸ்திரேலியாவின் கிரேஸோ பார்மா
(Creso Pharma)நிறுவனம் இலங்கையிலும் தனது வர்த்தக நடவடிக்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இது சம்பந்தமாக இலங்கையின் ஔடத நிறுவனமான ஸியோகா ஹெல்த் சேர்விஸ் (Ceyoka Health services) நிறுவனத்துடன் கிரேஸோ பார்மா (Creso Pharma) உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

கிரேஸோ பார்மா நிறுவனத்தின் தயாரிப்பான கென்னப்போர்ட் 50(CannAFFORD 50) என்ற மருந்து வகையை இலங்கையிலும் அறிமுகம் செய்வதே அந்த நிறுவனத்தின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலில் இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதே கிரேஸோ பார்மா (Creso Pharma)நிறுவனத்தின் நோக்கமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்பின்னர் இலங்கையின் ஸியோகா ஹெல்த் சேர்விஸ் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் அந்த மருந்து வகையை அறிமுகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையின் பிரபல ஔ்டத விநியோக நிறுவனமான ஸியோகா ஹெல்த் சேர்விஸ் பிரைவட் லிமிடட் தற்போது 1800 வகையான மருந்துகளை உள்நாட்டில் விநியோகம் செய்வதாக கூறப்படுகிறது.

கென்னப்போர்ட் 50 என்று மருந்து மாத்திரை வடிவில் கிரேஸோ பார்மா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment