Sunday, January 13, 2019

நாட்டுக்கு தற்பொழுது தேவை புதிய அரசியலமைப்பு அல்ல, தேர்தலே – அஸ்கிரிய பீடம்

January 13, 2019

நாட்டில் தற்பொழுது தேவைப்படுவது புதிய அரசியலமைப்பு ஒன்று அல்லவெனவும், மக்கள் அபிப்பிராயத்தை வினவும் தேர்தலே எனவும் அஸ்கிரிய பீடத்தின் போஷகர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தன்னிடம் தெரிவித்ததாக பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றைய (12) தினம் கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், தேரருடன் சந்திப்பை மேற்கொண்டுவிட்டு, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கு முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சில பின்னாசன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே விளக்கம் இன்றியுள்ளதாகவும் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தில் உள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடனேயே எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

0 comments:

Post a Comment