Sunday, January 13, 2019

மணப்பெண் பற்றாக்குறையால் சீனாவிற்கு கடத்தப்படும் வியட்நாம் சிறுமிகள்

January 13, 2019

சீனாவில் பாலின சமநிலையின்மை காரணமாக மணப்பெண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வியட்நாமில் இருந்து சிறுமிகள் கடத்தி வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் அதிக சனத்தொகை கொண்ட சீனாவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 50 ஆண்டுகளாக, சீன அரசாங்கம் குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை அமுல்படுத்தி வருகிறது.

கடந்த சில வருடங்களாக பிறப்பு விகிதம் சீராக இருப்பதால் அங்கு மக்கள் தொகை கணிசமான அளவு அதிகரிக்காத அதேநேரம், புதிய பிரச்சினைகள் எழுத்துள்ளன.

பெண்கள் பிறப்பு விகிதம் குறைந்து ஆண்கள் பிறப்பு அதிகரித்துள்ளது.

பாலின விகிதாச்சாரத்திற்கு அமைய 100 பெண்களுக்கு 110 தொடக்கம் 120 ஆண்கள், இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆட்கடத்தல் காரர்களால் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து சீனாவிற்கு இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தி வரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் சீனாவின் சில பகுதிகளில் விற்பனைக்கு உட்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment