Tuesday, January 8, 2019

இவ்வருடம் 2200 பில்லியனை கடனாகச் செலுத்த வேண்டும் - நிதி அமைச்சு

January 08, 2019 

இலங்கை இந்த வருடம் 2200 பில்லியன் ரூபாயை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைப் பெற்றுக்கொண்டுள்ள கடனுக்காக தவணை முறையில் 1300 பில்லியன் ரூபாயையும் அதற்கான வட்டியாக 900 பில்லியன் ரூபாயையும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கம் மற்றும் தற்​போதைய அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனுக்காக இந்த வருடம் குறித்த தொகை செலுத்தப்பட வேண்டும் என்பதுடன்  வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு அரசாங்கங்களிடம்  பெற்றுக்கொண்ட கடன் , திறைசேறி பற்றுச்சீட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகளின் கீழ் குறித்த கடன் தொகைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் செலுத்தப்பட வேண்டிய கடனுக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை இந்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்திலேயே எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது

0 comments:

Post a Comment