Monday, January 14, 2019

ஆளுநர் நியமனம் ;அப்துர் றஹ்மன் மௌனம் காப்பது ஏன் ?


January 15, 2019

இலங்கை வரலாற்றில் சிறுபாண்மை இனத்தை சேர்ந்த தமிழ் பேசும் முதல் கிழக்கு மாகாண ஆளுனராக கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பதவியேற்றுக் கொண்ட பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நிகழ்வொன்று கடந்த வாரம் அதிரடியாக இடம்பெற்றது.

தற்போதைய சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தின் முழு அதிகாரமும் நிறைந்த ஆளுநர் பதவியானது (மாகாண அரசில்லா நிலையில்) கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு கிடைத்த பின்னர் இதுவரை அவருக்கு ப‌கிர‌ங்க‌மாக‌ வாழ்த்துக்களையோ or பல்லின சமூகம் சார்ந்த இனவாதத்திற்கு எதிரான ஆதரவையோ காத்தான்குடியை தளமாக கொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உத்தியோக பூர்வமாக வெளிப்படுத்தவில்லை என்பது இங்கு அவதானிக்கத்தக்கது.

குறிப்பாக, சிறுபண்மையினத்தை சேர்ந்த ஒருவருக்கு இப் பதவி கிடைத்த இவ்வாறான சந்தர்ப்பத்தில், சிறுபான்மையினரின் ஏராளமான பிரச்சிணைக்கு குறிப்பாக காணிப் பிரச்சினைக்கு ஒரு இணக்க அரசியலின் ஊடக பல தீர்வுகளை பெறக்கூடிய நிகழ்தகவு அதிகமாகவுள்ள நிலையில் இவர்களின் இம் மெளனம், அப்துர் ரஹ்மான் சார்ந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை புடம்போட்டு காண்பித்துள்ளது.

ஆனால், ஹிஸ்புல்லாஹ் அவர்களின் கடந்த கால அரசியல் வரலாற்றை திரும்பி பார்க்கும் போது முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை மாத்திரமன்றி தமிழ், சிங்கள மக்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றிய கூடிய ஆளுமை மிக்க ஒருவரே இவர். குறிப்பாக இவர் அமைச்சராகவிருந்த காலங்களில் பாரிய அபிவிருத்தி, பாரபட்சமின்றிய சேவை என அனைவராலும் போற்றப்பட்ட ஒருவர்.

இவ்வாறான ஒரு பின்னணியில் கடந்த யுத்த காலத்தின்போது புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது மௌனம் சாதித்ததை போன்று ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஆளுநர் நியமானத்திற்கு பின்னர், இனரீதியான முன்னெடுப்புக்களை தமிழ் சமூகத்தில் உள்ள ஒரு சில இனவாதிகள் அண்மைய நாட்களில் முன்னெடுத்தபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை போன்று அதனோடு நல்லிணக்க அரசியல் என்ற பெயரில் நெருக்கமான உறவை பேணும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும், அப்துர் ரஹ்மானும் மௌனியாக இருந்த இச் செயற்பாடு  அப்துர் ரஹ்மான் உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரின் மீது காத்தான்குடியில் எதிர்மறையான விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது

0 comments:

Post a Comment