Wednesday, January 9, 2019

இறக்காமம் GCM நிறுவனத்தின் 2019 கான பாலர் பாடசாலை மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு

09. 01-2019 ( படங்கள்)

இறக்காமம் GCM நிறுவனத்தின் 2019 கான பாலர் பாடசாலை மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு GCM அமைப்பின் தலைவர்
M.N. M.நுசையிர் அவர்களின் தலைமையிலும் செயலாளர் S.M.நெளஷான் அவர்களின் மேற்பார்வையின் கீழும் அன்மையில்  நடைபெற்றது

இந்நிகழ்வுக்கு அதிதியாக கலந்து கொண்ட இறக்காமம் ஜும்ஆ பள்ளி  தலைவர் அல்ஹாஜ் A.k. றவூஃப் மௌலவி A.H.வஹாப் மௌலவி சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்
S.L.பைறூஸ் மெளலவி ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வில் கலந்துகொண்ட உலமாக்களால் பின்வரும் உரை நிகழ்த்தப்பட்டது

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் என்னென்ன விடயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் அத்தோடு பிள்ளைகளுக்கு  ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை எக்காரணம் கொண்டும் கொடுக்க கூடாது என்றும் அப்படி கொடுப்பதனால் சிறுவர்களின் பேச்சுத்திறன் குறைவடைகின்றது கண்பார்வை இளக்கப்படுகின்றது சிறுவர்கள் விளையாட்டிலும் குடும்ப உறவுகளிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள் அத்துடன் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் குறிப்பிட்டனர். மேலும்

குறிப்பாக மாலைவேளையில் தொலைக்காட்சியில் நாடகங்கள் பெற்றோர்கள் பார்ப்பதனால் நம்முடன் சேர்ந்து பிள்ளைகளும் பழக்கம் அடைந்து கொள்கிறார்கள் அத்தோடு  மார்க்க விடயங்களில் பிள்ளைகளை கூடுதலாக
ஈடுபடுத்த நாம் வலியுறுத்த வேண்டும் எதிர்காலத்தில் இச்சமூகத்தில் நல்லதோர்  கல்விமான்களாகவும். மார்க்க அறிஞர்களாகவும் எமது பிள்ளைகளை உருவாக்க பெற்றோர்கள் கரிசனை செலுத்த வேண்டும் என தனது கருத்தினை முன் வைத்தார்கள்



0 comments:

Post a Comment