Monday, December 3, 2018

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

04.12.2018

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி 13 தரப்புக்களினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.

ஏழு நீதியரசர்களைக் கொண்ட ஆயம் முன்னிலையில் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை இந்த மனுக்கள் மீதான விசாரணை இடம்பெறவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட 13 தரப்புக்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக இந்த மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்து எதிர்வரும் 7 ஆம் திகதிவரை இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment