Tuesday, December 25, 2018

அதிவேக வீதிகளில் வருமானம் அதிகரிப்பு


25.12.2018

தெற்கு அதிவேக வீதி மற்றும் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியின் வாகன போக்குவரத்து இத்தினங்களில் பாரியளவில் அதிகரித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை தொடக்கம் நாளாந்தம் குறித்த வீதிகளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் பயணித்துள்ளதாக அதிவேக வீதி செயற்பாட்டு பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்தார்.

அதேபோல் , கடந்த வௌ்ளிக்கிழமையன்று கொழும்பு - கட்டுநாயக்க வீதியில் அதிகளவான வானகங்கள் பயணித்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அன்றைய தினம் 32 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது குறித்த வருமானம் நூற்றுக்கு 8 சதவீத அதிகரிப்பு என அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment