Monday, December 31, 2018

2019இல் என்ன நடக்கும்!! மைத்திரியின் அதிரடி அறிவிப்பு..


31.12.2018

எதிர்வரும் ஆண்டில் தான் ஒரு முக்கியமான பிரகடனத்தை செய்யவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறைகூவல் விடுத்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஆண்டில் ஊழல் அற்ற ஒரு நாட்டை கடியெழுப்புவதற்கே இந்த அறைகூவல் விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் கண்டி தலாதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு பிறக்கவிருக்கும் புத்தாண்டுக்கான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் கூறுகின்றது.

அதனைத் தொடர்ந்து மல்வத்தை விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்தை மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரை சந்தித்து அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்ததாகவும் மேற்படி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இதன்போது தேரரால் பிரித் பாராயணம் செய்யப்பட்டு பிறக்கும் புத்தாண்டுக்காக ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் அளிக்கப்பட்டது.

அஸ்கிரி மகாநாயக்க தேரர் வெளிநாடு சென்றிருப்பதால் அஸ்கிரி கெடிகே மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, அஸ்கிரி அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி அனுநாயக்க தேரரை சந்தித்து உரையாடினார். இதன்போதும் தேரர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியை ஆசீர்வதித்தார்.

அஸ்கிரிய கெடிகே விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் அன்னதான மண்டபம் மற்றும் தொல்பொருள் நிலையத்தின் நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார். அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 2019ஆம் ஆண்டை ஊழல் அற்ற ஆண்டாக பிரகடனப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

தனது மனசாட்சிக்கு ஏற்ப நேர்மையாக செயற்பட்டு நாட்டை கட்டியெழுப்பும் சவாலை வெற்றிகொள்வதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்டு கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ராமாஞ்ய மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி, அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்ததுடன், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment