Saturday, December 29, 2018

வெளியான பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் விசேட செய்தி..!!


30.12.2018

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

இதற்கமைய பரீட்சையில் தோற்றியவர்கள் www.doenets.lk  மற்றும் www.sooriyanfmnews.lk என்ற இணையத்தளங்களில் பிரவேசிப்பதன் ஊடாக பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

அவர்களுள் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து  907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதேநேரம், 119 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

உயிரியல் விஞ்ஞான பாடத்தில் கம்பஹா ரத்னாவெலி மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த சமுது ராஜபக்ஷ முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பௌதிக விஞ்ஞானத் துறையில், கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த சத்துனி ஹன்சனி முதலாம் இடத்தையும், வர்த்தகத் துறையில் குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த கசுன் இந்துரங்க விக்ரமரட்ன முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

கலைத்துறையில் பாணந்துறை லைஸியம் சர்வதேச கல்லூரியைச் சேர்ந்த டம்யா டீ அல்விஸ் உம்இ பொறியியல் தொழில்நுட்பத்துறையில் கொழும்பு ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த பமுதித்த யசஸ் பத்திரனவும் முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.

இதேநேரம், உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் துறையில் கம்புறுப்பிட்டிய நரந்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சந்துனி பியம்ஸா கொடிப்பிலி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பரீட்சை மீள்திருத்தத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment