Monday, December 24, 2018

மார்ச்சு மாதம் ஜனாதிபதி தேர்தல்- சிறிசேனவை பொதுவேட்பாளராக நிறுத்த முயற்சி

December 24, 2018

ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடத்துவது குறித்து ஆராயப்படுவதாகவும் மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக நிறுத்துவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் பொதுஜனபெரமுனவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் ஆலோசகர் சிரால் லக்திலகவும் பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

வரவு செலவு திட்டம் மற்றும் மக்களிற்கான விசேட திட்டங்கள் மூலம் ஐக்கிய தேசிய முன்னணி தன்னை பலப்படுத்துவதற்கு முன்னதாக  ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என சிறிசேனவிற்கு அவரது ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதேவேளை இலஞ்ச ஆணைக்குழு திருத்த சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம்  ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்களிற்கு எதிராக அதனை பயன்படுத்தவேண்டும் எனவும் அவர்கள் சிறிசேனவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்

நன்றி
Ceylon News first

0 comments:

Post a Comment