04.12.2018
அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞரான மொஹமட் நிஸாம்தீன் மீது பொய்யான தீவிரவாத குற்றச்சாட்டை சோடித்த அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் உஸ்மன் கவாஜாவின் சகோதரரான அர்சலான் கவாஜா அந்நாட்டு பயங்கரவாத விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி நகரில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் அத்திட்டம் தொடர்பான ஆவணம் ஒன்றை வைத்திருந்ததாகவும் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குறிப்பாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்கம் டேன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷொப் ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மொஹமட் நிஸாம்தீன் குறித்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழுமையாக பயங்கரவாத குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மொஹமட் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்த குற்றச்சாட்டில் அர்சலான் கவாஜா கைது செய்யப்பட்டுள்ளார்.






0 comments:
Post a Comment