Monday, December 3, 2018

அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் 25இற்கு மேற்பட்ட கற்கைகளுக்கு விண்ணப்பம் கோரல்

  December 04, 2018

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் தமிழ்மொழிமூல தொழிற்பயிற்சி நிலையங்களில் அடுத்த கல்வியாண்டுக்கு பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை, நிந்தவூரில் உள்ள மாவட்ட அலுவலகம் கோரியுள்ளது.

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சம்மாந்துறை, அக்கரைப்பற்று, மத்தியமுகாம், காரைதீவு, சாய்ந்தமருது, பொத்துவில், திருக்கோவில் தொழிற்பயிற்சி நிலையங்களிலேயே 2019 ஜனவரியில் 25 இற்கு மேற்பட்ட கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய - தகவல் தொழில்நுட்பவியலாளர் (என்.வி.கியு. மட்டம் 4, 5), மின்னியலாளர், வாகன திருத்துனர், இலத்திரனியல் சாதனங்கள் தொழில்நுட்பவியலாளர்;, குளிரூட்டி மற்றும் வாயுச்சீராக்கி திருத்துனர், செயலாண்மைப் பயிற்சி, உதவி கணிய அளவையியலாளர், கணணி வன்பொருள் தொழில்நுட்பவியலாளர், தையல், ஆடைத்தொழிற்சாலை தரக் கட்டுப்பாட்டாளர், உணவு பரிமாறுபவர், மரக் கைவினைஞர் (கட்டிடம், தளபாடம்), அலுமீனியம் பொருத்துனர், விடுதி அலங்கரிப்பாளர், சமையலாளர், பேக்கர், நிர்மாணக் கைவினைஞர், முச்சக்கரவண்டி திருத்துனர், நீர்க்குழாய் பொருத்துனர், அதிவேக தையல் இயந்திர இயக்குனர் எலக்ரிக் மோட்டர் வைண்டர், உருக்கி ஒட்டுநர் போன்ற முழுநேரக் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதுதவிர, குறிப்பிட்ட சில பகுதிநேர பயிற்சிநெறிகளும் அதேபோன்று க.பொ.த.உயர்தர தொழில்நுட்ப பிரிவு ஆசிரியர்கள், மாணவர்களுக்கான விஷேட பகுதிநேர கற்கைகளும் நடாத்தப்படவுள்ளன. முற்றிலும் இலவசமாக நடாத்தப்படும் முழுநேரக் கற்கைநெறிகள் அனைத்தும் தேசிய தொழில் தகைமை (என்.வி.கியு) மட்டத்தை அடிப்படையாகக் கொண்டவையாக காணப்படும்.

இக் கற்கைநெறிகளை தொடர விரும்பும் இளைஞர், யுவதிகள் தம்மால் சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை (பெயர், பயிற்சிநெறி, தொலைபேசி இலக்கம்) – பிரதிப் பணிப்பாளர், மாவட்டக் காரியாலயம், மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம், பிரதான வீதி நிந்தவூர் (தொ.பே.இல. 0711211501) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

(ஏ.எல்.நிப்றாஸ்)

0 comments:

Post a Comment