Monday, December 3, 2018

இலங்கை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

04.12.2018

ஆசியாவின் உயர்ந்த கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பு தாமரைக் கூண்டு கோபுரம் இம்மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி இம்மாதம் கிறிஸ்மஸ் தினமாகிய 25ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது திறந்துவைக்கப்படவுள்ளது.

சீன வங்கியான எக்சிம் வங்கியின் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியில் அமைக்கப்பட்டுவரும் இந்த கோபுரம் ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக விளங்கப்போகின்றது.

இதுவரை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டுவந்த தடை எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னர் நீக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment