Thursday, January 3, 2019

அக்கரைப்பற்று வெள்ளப்பாதுகாப்பு வீதி இருள் சூழ்ந்த பிரதேசம் ஒளிமயமானது

04.01.2018

அக்கரைப்பற்று மாநகர பிரதேசத்தை அலங்கரிக்கின்ற அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியையும், அக்கரைப்பற்று அம்பாறை  வீதியையும் இணைக்கின்ற RDA வீதியான வெள்ளப் பாதுகாப்பு வீதி கடந்த காலங்களில் கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு வீதியாக காணப்பட்டது.

அப்படி இருக்கையில் அண்மையில் இவ்வீதியை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மிகவும் சிறந்த முறையில் காபட் வீதியாக மாற்றப்பட்டு
அதன்பின்னர் தற்போது
RDA வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பொருத்தப்படும் புதிய வடிவிலான 40 LED மின் குமிழ்கள் மலர்ந்துள்ள 2019 ஆம் ஆண்டில்  2019.01.01 ஆந் திகதி அன்று மாலை மாநகரப் பிரதேச மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது

தற்போது இவ்வீதிக்கு அக்கரைப்பற்று அம்பாறை பிரதான வீதியிலிருந்து அக்கரைப்பற்று ஹிஜ்றா சந்திவரையிலும், அதனைத் தொடர்ந்து ஹிஜ்றா பாடசாலையிலிருந்து சற்று தொலைவில் மின் குமிழ்கள் இரவு நேரம் காட்சியளிப்பதனால்
இருளில் மூழ்கிக் காணப்பட்ட இப்பிரதேசம் வெளிச்சத்தில் ஒளிமயமானதன் காரணமாக  இப்பிரதேசத்தில் இடம் பெறுகின்ற பல சட்ட விரோதச் செயற்பாடுகள் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர்களுக்கும் இதற்காக பல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் மேலான நன்றியினைத் தெரிவித்து மக்கள் மகிழ்சி அடைகின்றனர்.

0 comments:

Post a Comment