Monday, December 3, 2018

ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்


04.12.2018

தற்போதைய அரசியல் நிலைமையில் பொது மக்களுக்கான சேவைகளை தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களின் செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அனைத்து அமைச்சர்களின் செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிலைமையில் தேசிய பாதுகாப்புடன் நாடு மற்றும் பொது மக்களுக்காகவும் தமது பொறுப்பு மற்றும் கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதனுடன் அரசாங்க சேவைகள், முப்படைகள் மற்றும் காவல்துறை சேவைகளுக்கும் ஜனாதிபதி ஏற்கனவே தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment