December 4, 2018
ஜனாதிபதியினால் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழங்கு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ஏழு நீதிபதிகள் அடங்கிய குழுவினரால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
13 தரப்புக்களின் பிரதிநிதிகளினால் இந்த வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்ந்தும் நாளையும், நாளை மறுதினமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment