Thursday, November 29, 2018

இறுதி நேரத்தில் பின் வாங்கிய துமிந்த - அமரவீர: UNF தனித்து ஆட்சி!


29.11.2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த எதிர்ப்பாளர்கள் குழு முக்கியஸ்தர்கள் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பிரதமரின் செயலாளர் பொது நிதியைப் பயன்படுத்துவதற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் துமிந்த திசாநாயக்க - மஹிந்த அமரவீர குழு  பின்வாங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டி வரும் நிலையில் இன்றைய தினம் 123 பேரின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் சு.க தரப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவிடத்து விரைவில் அமையப் போகும் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகள் தரப்பட மாட்டாது எனவும் ஐக்கிய தேசிய முன்னணி தனித்தே ஆட்சியமைக்கும் எனவும் நேற்றே இவர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக ஐ.தே.க முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

மஹிந்த அணியில் குழப்ப நிலை தொடர்கின்ற அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதனால் உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பையே தரும் எனவும் மீண்டும் ஒக்டோபர் 26க்கு முன்னிருந்த வகையில் அரசு அமையும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment