Monday, November 26, 2018

சர்ச்சைக்கு மத்தியில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

27.11.2018

சர்ச்சைக்குரிய நிலைமைக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது.

இன்றைய தினமும் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் மற்றும் விசேட விருத்தினருக்கான பார்வையாளர் கூடம் என்பன குறிப்பிட்ட தரப்பினருக்காக அனுமதிக்கப்படாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே நாடாளுமன்ற கலரிக்குள் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும்இ இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின்போதும் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் மற்றும் விசேட விருத்தினருக்கான பார்வையாளர் கூடம் என்பன மூடப்பட்டிருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை அமர்வின்போது சபாநாயகரின் செயற்பாட்டுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுமந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில். பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று முற்பகல் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment