Tuesday, November 27, 2018

விரைவில் கைதாகவுள்ள முக்கியஸ்தரின் பட்டியல்! தேரர் வெளியிட்ட உண்மை

27.11.2018

எதிர் வரும் காலங்களில் வெகு விரைவில் சிறைக்கு செல்லவிருக்கும் அனைவரினதும் பெயர் விபரங்களையும் தம்பர அமில தேரர் வெளியிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தம்பர அமில தேரர் விரைவில் சிறைக்கு தண்டனை பெற்று செல்லவிருக்கும் நபர்களின் பெயர் விபரங்களையும் எந்தெந்த குற்றங்களுக்காக சிறைக்கு செல்லவுள்ளார்கள் என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே மஹிந்த தரப்பு மைத்திரியோடு இணைந்து ஜனநாயத்திற்கு எதிரான சதி முயற்சியில் இறங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

அந்த வகையில்,
1. மூன்றரை கோடி ரூபாய் ஊழல் மோசடி எதிர் வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வழக்கு விசாரணையின் இறுதி தீர்ப்பு

2. நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஆரம்பம்

3. நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக எதிர்வரும் 30ஆம் திகதி 3 கோடி ரூபாய் பண மோசடி வழக்கு விசாரணை

4. மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிரான வழக்கு விசாரணை எதிர் வரும் ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஆரம்பம்

5. விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான கடவுச்சீட்டு மோசடி தொடர்பான வழக்கு விசாரணை எதிர் வரும் டிசம்பர் மாhதம் 11ஆம் திகதி நடைபெறும்.

6. திவி நெகும வேலைத்திட்டத்தின் கீழ் 3000 கோடி ரூபாய் பண மோசடி தொடர்பாக பஷில் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 26ஆம் திகதி (நேற்று)

7. ஜோன்ஸ்ட்டனிற்கு எதிரான வழக்கு விசாரணை எதிர் வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி நடைபெறும்.

8. விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு விசாரணை எதிர் வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி நடைபெறும்.

9. விமல் வீரவன்சவிற்கு எதிரான 40 அதி சொகுசு வாகனக் கொள்வனவு வழக்கு விசாரணை கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது. அவ் வழக்கு விசாரணை மீண்டும் எதிர் வரும் மே மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

10. கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக விஷேட நீதிமன்றில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11, 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

11. காமினி செனரத்திற்கு எதிராக தொடர்ச்சியாக வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது.

மேற்கண்டவாறு தேரர் பட்டியலிட்டதோடு இதைத் தவிர மேலும் பல வழக்கு விசாரணைகள் இடம்பெற்று பலர் சிறைச்சாலைக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நன்றி
Jaffna Muslim

i

0 comments:

Post a Comment