Tuesday, November 27, 2018

பாராளுமன்றத்தில் ஹக்கீம், எழுப்பிய சிறப்புரிமை

, November 27, 2018 

“சில ஊடகங்கள் அரசாங்கம், ஆளுந்தரப்பு அமைச்சர் , பிரதமர் என்று சிலரை அடையாளப்படுத்துவது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலாக அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இன்றைய -27- பாராளுமன்ற அமர்வின் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட  ரவூப் ஹக்கீம்,

“பாராளுமன்றம் கலைக்கப்பட்டு இந் நாட்டில் அரசாங்கம் என்று ஒன்றில்லை என்று சபாநாயகரால் அறிவிக்கப்பட்டு பாராளுமன்ற அமர்வு பதிவு அறிக்கையான ஹன்சார்ட் அறிக்கையிலும் பதிவாகியுள்ள நிலையில் சில ஊடகங்கள் சிலரை பிரதமர் அமைச்சர் என்றும் ஆளுங்கட்சி எதிர் தரப்பு என்றும் சுட்டி குறிப்பிடுவது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாக உள்ளது எனவும் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment