Friday, August 3, 2018

வேதனத்தை அதிகரிப்பது குறித்த இறுதி முடிவு

, 03 AUGUST 2018 -

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான வேதனத்தை அதிகரிப்பது குறித்த இறுதி முடிவு, கட்சித் தலைவர்களின் அறிவுறுத்தல் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என்று நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் இந்த யோசனைத் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளது தலைவர்களின் அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை.

2006ம் ஆண்டு நொவம்பர் மாதம் 23ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், நீதிபதிகளுக்கு வேதனம் அதிகரிக்கப்படுவதற்கு சமாந்தரமாக நாடாளுமன்ற உறுப்பினர்களது வேதனமும் அதிகரிக்கப்பட வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நீதிபதிகளின் வேதனம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனமும் அதிகரிக்கப்படும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக, நாடாளுமன்ற செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த யோசனையை நடைமுறைப்படுத்த கட்சிகளின் தலைவர்களது அங்கீகாரம் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் 215 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக நேற்றையதினம் தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment