July 8, 2018
டெல்லிலியை உலுக்கிய 11 பேரின் தற்கொலை செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த ஒட்டல் அதிபர் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணா என்பவர் சக்காலா பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். சில ஆண்டுகளாக இவரது ஓட்டல் நஷ்டத்தில் இயங்கி வந்துள்ளது.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணா, சமீபத்தில் டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்துகொண்ட செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து தனது மகளிடம் அதிக முறை விவாதித்துக்கொண்டே இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கிருஷ்ணா வெகு நேரமாகியும் படுக்கை அறையைவிட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி அறைக்குள் சென்று பார்த்தார். அப்போது, கிருஷ்ணா மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment