Thursday, August 2, 2018

Galle face இல் உணவு பண்டங்கள் உண்பவரா ? இதோ ஓர் எச்சரிக்கை பதிவு


02.08.2018

இறால் வடை…

தலைப்பைப் பார்த்ததும் “இறால் வடை செய்வது எவ்வாறு?” என்று நான் RECIPE தரப்போகிறேன் என்று நினைக்க வேண்டாம். இன்று சில இடங்களில் விற்கப்படும் இறால் வடை பற்றி கொஞ்சம் சொல்லலாம் என நினைக்கின்றேன்.

கொழும்பு GALLE FACE (காலி முகத்திடல்) இற்கு இனிமையான மாலைப் பொழுதைக் கழிக்க உள்ளூரிலிருந்தோ, வெளியூர்களிலிருந்தோ அன்றாடம் வரும் மக்களில் அனேகமானோர் தவறாமல் விரும்பி சாப்பிடும் உணவு தான் “இறால் வடை”. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அந்தி பொழுதில் அஸ்தமனத்தை இறால் வடை சாப்பிட்டுக் கொண்டு கழிப்பார்கள்.

GALLE FACE இல் FAST FOOD SHOPS அதிகமாக காணப்பட்டாலும், பொதுவாக இறால் வடைகள் தள்ளு வண்டி பெட்டிக் கடைகளில் மட்டுமே விற்கப்படுகின்றன. இறால் வடையுடன் ரொட்டி, கூணி இறால் வடை போன்றனவும் விற்கப்படுகின்றது. எம்மவர்களில் அதிகமானோர் மிக விரும்பி சாப்பிடும் இந்த இறால் வடை பொறிக்கப்படுகின்ற எண்ணெயை எப்போதாவது கொஞ்சம் நோட்டமிட்டுள்ளீர்களா?

“எத்தனையோ உணவகங்களில் பாவிக்கப்படும் OIL வகைகள் கடும் கருப்பு நிறமானவை. பழைய எண்ணெயுடன் புதிய எண்ணெய் கலந்து எண்ணெய் வியாபாரிகள் சிலர் எண்ணெய் விற்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு செய்தியில் காண்பிக்கப்பட்டது. மேலும் ஒரே எண்ணெயைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் பாவித்த உணவகங்கள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டன” என்ற தகவலை நான் எனது முன்னைய பதிவொன்றில் சொல்லியிருந்தேன். ஆனால் இந்த இறால் வடை எண்ணெய் சமாச்சாரம் சற்று வித்தியாசமானது.

அண்மையில் எனக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியதைக் கேட்டு ஒரு நிமிடம் நான் அதிர்ச்சியடைந்தே விட்டேன். அவர் கொழும்பில் உள்ள ஒரு CLUB இல் பத்துவருடங்களாக பணி புரிந்தவர். அந்த CLUB இல் BAR, GYM, LIBRARY, RESTAURANT, POOL, LUXARY ROOM என எல்லாம் உண்டு. கோடீஸ்வரர்கள் மட்டுமே அங்கு ANNUAL MEMBERSHIP எடுக்கலாம். பெயர் தாங்கி இஸ்லாமியர்கள் சிலரும் அங்கு MEMBERS ஆக உள்ளனர். WEEKENDS அல்லது HOLIDAYS நாட்களில் வந்து ENJOY பண்ணிவிட்டு போவார்கள். அங்கு PORK (பன்றி இறைச்சி) யும் SERVE பண்ணப்படுகிறது.

இந்த இறால் வடை வியாபாரிகள் சிலர் இவ்வாறான CLUBS, STAR HOTELS களை கமுக்கமாக பிடித்து வைத்துள்ளனர். அங்கு ஏற்கனவே சமையலறையில் பாவித்த எண்ணெயை இவர்கள் எடுத்து இவர்கள் இறால் வடை பொறிக்கின்றனர். ஏனெனில் STAR HOTELS களில் HYGIENIC முக்கியம். ஆகவே அங்கு பழைய எண்ணெய்களை மீண்டும் பாவிக்க மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் புதிய எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் HOTELS களில் பன்றி இறைச்சி சமைத்த அல்லது பொறித்த எண்ணெயாக இருந்தாலும் அதில் தான் இறால் வடைகள் பொறிக்கப்படுகின்றன. மேலும் இறால் வடைக்கு மேலால் ஊற்றும் ஆணம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? தூவும் வெங்காயங்கள் துப்புரவானதா? என்பன பற்றியும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

எனது நண்பர் இந்த விடயத்தை எனக்கு கூறியதிலிருந்து நான் இறால் வடை பக்கமே போவதில்லை. அதைக் கண்டாலே VOMITISH ஆக இருக்கும். அது “மாஷா அல்லாஹ்” STICKER ஒட்டிய கடையாக இருந்தாலும்…

அஸீம் லாஹிர் – கொழும்பு
Srilankamuslim

0 comments:

Post a Comment