Friday, August 3, 2018

தொடர்ந்து அச்சத்தில் உறைந்துள்ள யாழ் மக்கள்!! படங்கள்

, 03 AUGUST 2018 -

யாழ்ப்பாணம் - அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு நேற்று (02) நள்ளிரவு விசமிகள் தீமூட்டி நாசமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே விசமிகள் தீமூட்டியுள்ளனர்.

அண்மைக்காலமாக அராலிப் பிரதேசம் முழுவதும் கிறீஸ் பூதங்களின் அட்டகாசம் அரங்கேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூதங்கள் இரவு வேளைகளில் வீடுகள் மீது கற்களை கொண்டு எறிவதாகவும், வீட்டு யன்னல்கள் மற்றும் கதவுகளைத் தட்டுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு, பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்குத் தீயிட்டதுடன், அயலிலுள்ள அவரது தம்பியின் வீட்டு யன்னல்களைத் தட்டியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கைங்கரியத்தைச் செய்தது கிறீஸ் பூதமா அல்லது விசமிகளா என்று அவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதேவேளை, அண்மைக்காலமாக அராலிப் பிரதேசத்தைக் கலக்கமடையச் செய்துவரும் கிறீஸ் பூதங்களின் அட்டகாசம் தான் இது என்று அயலவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவத்தால் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வட்டுக்கோட்டை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment