Friday, August 24, 2018

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை கோரிய 3000 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

25.08.2018

இலங்கையர்கள் பெற்ற உதவிக் கொடுப்பனவை மீள செலுத்துமாறு சுவிஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 3 வருடங்களில் அரசியல் தஞ்சம் கோரி சுவிட்சர்லாந்து சென்ற இலங்கையர்களுக்கு வழங்கப்பட்ட உதவி கொடுப்பனவை மீள வழங்குமாறு சுவிஸ் அரசாங்கம் கோரியுள்ளது.

அதற்கமைய 3000 இலங்கையர்களிடம் இவ்வாறு உதவி கொடுப்பனவு திருப்பி கோரப்பட்டுள்ளது. அவர்கள் தமக்கு குடியுரிமை வழங்குமாறு கோரியமையே இதற்கு காரணமாகும்.

இந்த உதவி கொடுப்பனவை செலுத்தவில்லை என்றால் குடியுரிமை வழங்கப்படாதென சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

உதவி கொடுப்பனவை திரும்ப பெறும் சட்டம் கடந்த முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் அரசியல் பாதுகாப்பு கோருபவர்களுக்கு 350 முதல் 400 சுவிஸ் பிராங் உதவி கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.

இதன் காரணமாக போலி ஆவணங்கள் மூலம் சுவிட்சர்லாந்து சென்ற இலங்கை ஊடவியலாளர்கள் மற்றும் இணைய ஊடகவியலாளர் 12 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments:

Post a Comment