06.11.2018
கத்தாரிலிருந்து வெளியேற உங்களுக்கு EXIT PERMIT தேவையா? இல்லையா என்பது பற்றிய அறிவை கத்தார் வாழ் வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதற்காக உள்துறை அமைச்சு முக்கியமான நடவடிக்கையொன்றை எடுத்துள்ளது. கத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டுவெளியேற EXIT PERMIT தேவையில்லை என்ற சட்டத்தை கடந்த ஒக்டோபர் 28ம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டுவந்தது கத்தார். என்றாலும் இது தொடர்பான மயக்கம் அனைவரிடத்திலும் இருந்து வந்தது. இந்த மயக்கத்தை நீக்க கத்தார் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கத்தார் தற்போது பணியில் இருக்கும் நீங்கள் நாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் EXIT PERMIT தேவையா? இல்லையா என்பதை நீங்களே தற்போது பரிசோதித்துக் கொள்ளலாம்.
முதலில் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு செல்லுங்கள்
இணைய முகவரி
QID ID என்ற இடத்தில் உங்களது கத்தார் IDயின் இலக்கங்களை டைப் செய்யுங்கள். பின்னர் இடது பக்கத்தில் தரப்பட்டுள்ள 3 இலக்கங்களை வலது பக்கம் தரப்பட்டுள்ள BOX யில் டைப் செய்து விட்டு SEARCH ஐ கிளிக் செய்யுங்கள்
கத்தாரை விட்டு நீங்கள் வெளியேற EXIT PERMIT என தேவையில்லை என்றால் EXIT PERMIT NOT REQUIRED என்று கீழே உள்ள படத்தைப் போன்று தோன்றும்.
குறிப்பு - தனியார் நிறுவனங்களின் 5 வீதமான ஊழியர்களுக்கு கத்தாரை விட்டு வெளியேற EXIT PERMIT தேவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment