August 22, 2018
காலமான சந்திரா டியூடர் ராஜபக்ஷவின் உடல் மெதமுலானவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்க்கு இன்று (22) காலை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரான சந்திரா டியூடர் ராஜபக்ஷ, தங்காலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையை பெற்று வந்த நிலையில் நேற்று (21) காலமானார்.
அன்னாரின் பூதவுடலுக்கு இந்திய அரசியல்வாதி உள்ளிட்ட பலர் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
காலமான சந்தர ராஜபக்ஷவின் இறுதிக்கிரியைகள் ஆகஸ்ட் 25 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.






0 comments:
Post a Comment