Wednesday, August 22, 2018

சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு உறுப்பினர்களின் விபரம் வர்த்தமானியில்


August 22, 2018

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகள் தொடர்பான ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் விபரங்கள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் தலைவராக எஸ். ரனூக்கே நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ். ரனூக்கே தலைமையிலான குழுவில் மேலும் 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கே.எல். விஜயரத்ன, டி.பி. கொல்லுரே, சி.பி. ஸ்ரீவர்தன, சுந்தர்ம கருணாரட்ன, ஜனக சுகததாச, தாரணி எஸ். விஜயதிலக்க, லலித் ஆர். டி சில்வா, ஜி.எஸ் எதிரிசிங்க, ஏ.ஆர். தேசப்பிரிய, பீ.பி.பி.எஸ். அபேகுணவர்தன, டொக்டர் பாலித அபேகோன், பி. தங்கமயில், எஸ்.டி. ஜயகோடி மற்றும் எம்.சி. விக்ரமசேகர ஆகியோரே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களாவார்கள்.

0 comments:

Post a Comment