, 04 AUGUST 2018
காலி நீதிமன்றத்திற்கு சொந்தமான உனவட்டுன பகுதியில் அமைந்துள்ள வாகன களஞ்சியசாலைக்குள் இன்று அதிகாலை கொள்ளையர்கள் குழுவொன்று நுழைந்துள்ளது.
களஞ்சியசாலையின் காவலர் உதவியுடன் அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகம் ஒன்றை திறக்க முற்பட்ட வேளை அந்த இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் வந்துள்ள நிலையில், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த களஞ்சியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் பாகங்கள் நீண்டகாலமாக கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறை, சம்பவம் தொடர்பில் களஞ்சியசாலையின் காவலரை கைது செய்துள்ளது.
Hiru
0 comments:
Post a Comment