August 5, 2018
வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோ கலந்துகொண்ட நிகழ்வில் குண்டொன்று வெடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
வெனிசுவேலா தேசிய படைகளின் 81 வது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில் இன்று (05) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் தனது மனைவி, படையினர் சூழ உரையாற்றிக் கொண்டிருக்கையிலேயே இந்த குண்டு வெடித்துள்ளது.
இதனால், ஜனாதிபதிக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென குறிப்பிடப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் வெனிசுவேலா தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோர்ஜ் ரோட்ரிகியூஸ் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஆளில்லா சிறிய ரக விமானம் (ட்ரோன்) மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆனால், ஜனாதிபதி மதுரோவுக்கு எந்த ஆபத்தும் இன்றி தப்பியுள்ளார். சம்பவத்தில் படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
வெனிசுவேலா தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கூட்டாட்சி குடியரசு ஆகும்.
வெனிசுவேலா 31 மில்லியன் (31,775,371) மக்களைக் கொண்டுள்ளது. மிகக் கூடுதலான பல்லுயிர் வளம் கொண்ட நாடாக இது விளங்குகின்றது. உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான உயில் இனங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 7 வது இடத்தில் இந்நாடு உள்ளது.
இந்நாட்டில் பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கிறது.
14 ஆண்டுகள் இந்நாட்டின் தலைவராக ஊகோ சாவேசு இருந்துள்ளார். அவர் மறைந்ததை அடுத்து துணை ஜனாதிபதி நிக்கோலசு மதுரோ ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment