Sunday, August 5, 2018

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று


August 5, 2018

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று (05) காலை 9.30 மணிக்கு தேசிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளதாகவும் இதற்காக சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை இப்பரீட்சைக்கு 355326 மாணவர்கள் தோற்றவுள்ளனர். தேசிய ரீதியில் 3050 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.
இப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளை, பாடசாலை விடுமுறைக் காலத்தில் நிறைவு செய்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

0 comments:

Post a Comment