August 05 2018
மரணத்தின் பின்னனியில் அல்சர் எனும் நோய்.. ஆரம்பத்தில் குடல் புண் பின்னர் ஓட்டையாகி வாழ வேண்டிய வயதில் நேற்று இயற்கை எய்தினார். அவருடைய பாவங்களை இறைவன் மண்ணிப்பானாக..
கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று கல்வி வலய மக்களே நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த இளம் ஆசிரியை அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து படபடவென ஆயத்தமாகி ஏறாவூர் பாடசாலைக்கு தினமும் சென்றுபின்னர் அங்கிருந்து 2.00 Pm புறப்பட்டு 4.00 மணிக்கு வீடு வந்து சமைப்பவராகவும் சாப்பிடுபவராகவும் இருந்தார். ஒரு நாள் அல்ல, ஒரு மாதம் அல்ல, 5 வருடங்கள்..
இதுதான் இவருடைய மரணத்துக்கு பின்னால் இருந்த பிரதான காரணி. காலை உணவும் பகல் உணவும் 5 வருடங்கள் நிர்ப்பந்த சூழ்நிலைக்குள்ளே....
இன்று எம்முடைய பிரதேச இளம் ஆசிரியர்கள் மட்டும் வெளிமாவட்டங்ளுக்கு கண்மூடித்தனமாக எறியப்பட்டு நிபந்தனை காலங்கள் பூர்த்தி அடைந்தும் இது போன்ற பல பிரச்சினைகளுடன் சித்திரவதைக்குள்ளாகியுள்ளனர்.
எமது பிரதேசத்தை சேர்ந்வரே மாகாண கல்விப் பணிப்பாளராக இருந்தும் எறியும் நெருப்பில் பெற்றோல் ஊற்றுபவராகவே தொழிற்படுகிறார்.
ஒவ்வொரு புதன் கிழமையும் எமது ஆசிரியர்கள் இவருடைய திருகோணமலை அலுவலகத்துக்கு இவ்வாறான நோய்களோடும், குழந்தை பிரச்சனை , பொருளாதார பிரச்சினைகளோடும் முறையிட சென்றால் எதற்கும் செவிசாய்க்காத வரம்பற்ற அதிகாரத்தை கொண்ட ஹிட்லர் போன்றே பதில்களை வழங்குகிறார்.
எமது மக்கள் பிரதிநிதிகளே இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்குள் பரிதவிக்கும் எமது ஆசிரியர்களை பசி பட்டினி இல்லாமல் உரிய வேளைக்கு மனைவி பிள்ளைகளோடு சேர்ந்து சாப்பிடுவதற்கும், நோய்
நொடியற்று வாழ்வதற்கும் இதுபோன்ற இன்னுமொரு மரணம் ஏற்படாமல் இருப்பதற்கும் உங்கள் குரல் சட்டசபை வரை ஓங்க வேண்டும். இதற்கு என்றும் நன்றியுடையவர்களாக எமது மக்கள் மாறுவார்கள் என்பதில் ஐயமில்லை
தோழி றிப்னாவின் மறைவில் துயருறும் அவரது கணவர், குடும்பத்தார், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
நன்றி - Mohemed Sham
உண்மையின் பக்கம்
0 comments:
Post a Comment