Sunday, August 5, 2018

இறக்காமத்தில்  அம்பாரை மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர்கள்  ஒன்றுகூடல் (படங்கள்)

July 05. 2018

அம்பாறை மாவட்டத்துக்கான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டம் இன்று 05 இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

இறக்காமத்தை சேர்ந்த பொது ஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்டத்தின் இளைஞர்கள் அமைப்பின் தலைவரும்  இக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் S.M.M.இர்ஷாட் அதாப்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது

இக் கூட்டத்திற்கு வருகை தந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஏ.எச்.எம்.நெளஷாட் மற்றும் பொருளாளர் M.இபாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளும் இக்காட்சியின் அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது இதன்போது இக் கூட்டத்துக்கு வருகை தந்த அம்பாரை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை கல்முனை நிந்தவூர் ஒலுவில் பாலமுனை அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று பொத்துவில்  ஆகிய பிரதேசங்களிலிருந்து இக்காட்சியின் அமைப்பாளர்களும் மத்திய குழு தலைவர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்


0 comments:

Post a Comment