Sunday, August 5, 2018

கத்தாரில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உடலுறுப்பு தானம் செய்பவர்களாக பதிவு செய்துள்ளனர்!

August 05, 2018


2018ம் ஆண்டு மே மாதம் முதல் இன்று(05-.08 2018)  வரை  35 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள்  உடலுறுப்பு தானம் செய்பவர்களாக பதிவு செய்துள்ளதாகவும், மொத்தமாக இதுவரை கத்தாரில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உடலுறுப்பு தானம் செய்பவர்களாக பதிவு செய்துள்ளதாக கத்தார் ஹமத் வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ரமழான் காலப்பகுதியில் கத்தார் ஹமத் வைத்தியசாலை"Annual Organ Donation Campaign" வருடாந்த உடலுறுப்பு தான  பிரச்சாரத்தை ஆரம்பித்தது. இதன் பின்னர் கத்தாரின் பிரபல சூபர் மார்க்கட்டுக்கள், மோல்கள், உட்பட முக்கிய இடங்களில் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அடிப்படைகளில் அதிகளவான கத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் உட்பட பலர் தங்களை உடலுறுப்பு தானம் செய்பவர்களாக பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் தற்போது கத்தார் வாழ் சனத்தொகையில் 15 சத வீதத்தினர் பதிவு செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment