Saturday, August 18, 2018

கேரள பெருவெள்ளம் எதனால்? பகீர் கிளப்பும் சாமியார்

August 18, 2018
   
கேரளாவில் இதுவரை 324 நபர்களை பலிவாங்கிய பெருவெள்ளத்திற்கு இதுதான் காரணம் என அங்குள்ள சாமியார் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து பகீர் கிளப்பியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் 1924 ஆம் ஆண்டுக்கு பிறகு எதிர்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய வெள்ள பேரிடர் இது.

மட்டுமின்றி கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பெருமழையை கேரளம் எதிர்கொண்டுள்ளது.

கேரளத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில் அங்குள்ள 80 அணைகள் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டுள்ளது.

பெருவெள்ளம், நிலச்சரிவு என இதுவரை 324 பேர் மரணமடைந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த கேரள மாநிலமே தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அரச்சகர் ஒருவர் வெளியிட்டிருக்கும் கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

அதில், சாமியே சரணம் ஐய்யப்பா என துவங்கும் அவர், ஐய்யப்பன் மலைக்கு யார் வேண்டுமானாலும் போகலாம், எவ்வாறு வேண்டுமானாலும் போகலாம் ஆனால் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு ஆச்சாரம் இருக்கும், அதை மாத்துவதற்கு நீதிமன்றத்திற்கு யார் அதிகாரம் தந்தது? நீதிமன்றம் போனார்கள் இல்லையா, அவர்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கா? அவர்கள் அனைவரும் நம்பிக்கை அற்ற நாத்திகர்கள்.

கேரள பெண்கள் எவரும் ஐய்யப்பன் மலை ஏற வேண்டும் என கேட்டார்களா? கடவுள் நம்பிக்கை உள்ள பெண்கள் எவரும் நீதிமன்றம் செல்லவில்லை.

கடவுள நம்பிக்கையே இல்லாத நாத்திகர்கள் தாங்களும் ஐய்யப்ப மலை ஏற வேண்டும் என கேட்டு நீதிமன்றம் போனது தான் இந்த பிரளயத்திற்கு காரணம்.

இப்போது ஐய்யப்பன், காரணம் என்ன? அதன் விளைவுகள் எவ்வளவுன்னு கோடிட்டு காட்டியிருக்கிறார். அவர் கோடிட்டு காட்டியதை நம்மால் தங்கிக்க முடியல இப்போ.

இப்போ எல்லோருக்கு திருப்தியா? நீதிபதிக்கு திருப்தியா? நீதிமன்றம் போன பெண்களுக்கு திருப்தியா? என கேள்விகளாக அடுக்கியுள்ளார் அந்த சாமியார்.

0 comments:

Post a Comment