Wednesday, August 22, 2018

2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

22.08.2018

2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்களில் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் அகற்றப்பட்டுள்ள பெயர்கள் காட்சி படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள்பட்டு வருகின்றன.

இதற்கமைய, அனைத்து கிராம உத்தியோகத்தர்கள் காரியாலயம், பிரதேச செயலாளர் காரியாலயம், மாகாண சபை காரியாலயம் மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயம் ஆகிய நிலையங்களில் காட்சிபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏதேனும் எதிராக ஏதேனும் முறைப்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பதிவு செய்யுமாறு பெப்ரல் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

0 comments:

Post a Comment