Tuesday, July 17, 2018

அபிவிருத்தி உத்தியோகத்தர் கொலை – கிராம சேவை பெண் உத்தியோகத்தர் கைது


July 17, 2018


அங்குருவாதொட்ட, வேரவத்தை பிரதேசத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் கிராம சேவை பெண் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (16) அதிகாலை அங்குருவாதொட்ட, யாலசந்தி, வேரவத்தை பிரதேசத்தில் தங்கும் விடுதி ஒன்றில் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
தொடங்கொட பிரதேச செயலக அலுவலகத்தில் பணியாற்றும் 35 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்வம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த கிராம சேவை பெண் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதுடைய சந்தேகநபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
தகாத உறவு முறை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment