.July 28, 2018
கத்தாரில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒரு பெண் உட்பட நான்கு ஆபிரிக்க நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக இவர்கள் வங்கிகளுடன் தொடர்புடைய திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பண பறிமாற்ற நிறுவனங்களிலிருந்து திரும்பும் வாடிக்கையாளர்களிடம் இவர்கள் கைவரிசையை காட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பணம், மற்றும் திருட்டுக்காகப் பயன்படுத்துப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவர்கள் அனைவரும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.






0 comments:
Post a Comment