July 17, 2018
கொலைக் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட மூன்று நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதுடன், அவரின் மனைவி மீது தாக்குதல் நடத்தி கடுமையான காயம் ஏற்படுத்தியதாகப் பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் பிரதிப் பிரேமசந்திர, சுதத் குமார, சுமித் ஶ்ரீலால் ஆகிய மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மற்றொரு பிரதிவாதிக்கு கடுமையான உழைப்புடன் ஏழரை ஆண்டு சிறைத்தண்டனையும் 25,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றொரு பிரதிவாதிக்கு எதிரான குற்றங்களை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்க முடியாமையின் காரணமாக அவரை விடுவித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment