July 19. 2018
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் மொஹமட் தாஜூடீன் கொலை நடந்த ஹெக்லோக் வீதியில் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி கெமராக்களின் பதிவான காட்சிகள் அடங்கிய இரண்டு டி.வீடிகளை கணனி அவசர பதில் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி லால் டயஸிடம் சமர்பித்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமார, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
தாஜூடீனின் சகோதரியான பாத்திமா அயேஷா தாஜூடீன் கடந்த வருடம் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வழங்கிய டி.வீ.டிக்களை கணனி அவசர பதில் அமைப்பிடம் வழங்கி, அறிக்கை ஒன்றை பெற வேண்டிய தேவை இருப்பதாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கையை ஏற்று நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
0 comments:
Post a Comment