Tuesday, July 17, 2018

இலங்கையில் பேஸ்புக், மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை

   July 18 , 2018 

மின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு கணினி அவசர சேவை சபை முக்கிய தகவல் ஒன்றை வழங்கியுள்ளது. மின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் ஊடாக வருகின்ற தகவல் ஒன்றின் மூலம் கடவுச் சொற்கள் திருடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு கணினி அவசர சேவை சபை கோரிக்கை விடுத்துள்ளது. மின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் மூலம் வரும் செய்தியை திறப்பதன் மூலம் மீண்டும் கடவுச் சொற்களை பதிவிடுமாறு கேட்கப்படும். அவ்வாறு நாம் எமது கடவுச்சொற்களை பதிவிடும் போது வேறொரு தரப்பினரால் அந்த கடவுச் சொற்கள் திருடப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனவே முடிந்தளவிற்கு தேவையற்று வரும் அத்தகைய தகவல்களை திறப்பதை தவிர்க்குமாறு கணினி அவசர சேவை சபை கோரிக்கை விடுத்துள்ளது.

0 comments:

Post a Comment