Tuesday, July 17, 2018

இலங்கை திரைப்படம் முதன்முறையாக ஒஸ்கார் விருதுக்கு தெரிவு


July 17, 2018


2019ம் ஆண்டு ஒஸ்கார் விருதுக்காக இலங்கை திரைப்படம் ஒன்று சிறந்த திரைப்பட பிரிவுக்கு முதன்முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உறைந்த நெருப்பு (The Frozen Fire )என்ற திரைப்படமே இந்த விருதுக்காக தெரிவாகியுள்ளது. இதனை அனுராத ஜெயசிங்க இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் சமீபத்தில் திரைப்பட கூட்டுத்தாபனத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
இலங்கையில் திரைப்படத்துறையில் இருந்து இரண்டு முறை ஒஸ்கார் விருதுக்காக இலங்கை திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இதுவே முதன்முறையாக சிறந்து வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ஒஸ்கார் விருது பிரிவை சேர்ந்த முகாமையாளர் நிஷா ஜோசப் (Nisha Joseph) இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் பொழுது போக்கு துறையில் சினிமாத்துறை வளர்ச்சியடைந்து வருகிறது என தெரிவித்தார்.

இது இலங்கை திரைப்பட துறைக்கு பாரிய கௌரவமாகும். இலங்கை சினிமா துறை சர்வதேச ரசிகர் அரங்கில் மிகுந்த வரவேற்பு உண்டு என அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment